பாடல்கள் எல்லாம் மோதலையே ஹிட் ஆகி ரொம்ப எதிர்பார்க்க வைத்த படம். ஆனா விமரிசனம் சரி இல்லாம போச்சு. நடக்குமா நடக்காதான்னு கேட்டு படத்த பார்த்தீங்க அப்பறம் கண்டிப்பா படம் நல்ல இல்லன்னு சொல்ல தோணும். பின்ன என்ன படிச்சா டாக்டர் சீட்டு விளையாடி மொபைல் தொலைக்கறார், ஏர்போர்ட் ஏதோ ஒரு பொண்ணு போட்ட ஒரு கோட் அ அங்கேயே தூக்கி போடாம பத்திரமா ரூம்க்கு எடுத்துட்டு வராராம். இதெல்லாம் படிகாதவன்களே புரிஞ்சு பண்ற விஷயம். அப்பறம் அங்க அவருக்காக வாதாட வர வக்கீல் எந்த ஒரு காரணமும் இல்லாம லவ் பண்றாங்களாம் ஐயோ ஐயோ னு தலைல அடிச்சுக்கலாம் போல இருக்கு. படத்துல ஒரு நல்ல பாட்டு ஆழியிலே. அத ஹீரோயின் கற்பனை பண்றாங்களாம் அவங்க கார்ல ஹீரோ ஓட வெறுமன ஒரு துண்டோட இருகர மாதிரியா கற்பனை பண்ணுவாங்க. ஜீவா சார் உங்க கிட்ட இருந்து இத நான் எதிர்பார்கல. என்ன பண்ண நீங்களும் பணம் சம்பாதிக்கணும்.
எந்த ஊர்ல அந்த சர்ச் இருக்கு? யாராச்சும் சொன்ன நல்ல இருக்கும். டயலாக் படி யாராச்சும் வேண்டிக்கிட்டு மணி அடிச்சா நினைச்சது நடக்கும். ஆனா படத்துல ஹீரோயின் வேண்டிக்கறாங்க வேற யாரோ மணி அடிக்கறாங்க, ஹீரோ கரெக்ட் ஆ வந்திடறார். அப்போ டயலாக் ல சொல்லி இருக்கலாமே. அப்பறம் கங்கனா கங்க்ச்டேர் ல ரொம்ப நல்ல நடிச்சி இருந்தாங்க. இதுல பெரிசா ரோல் இல்ல. இருந்தாலும் ஓகே. அனு ஹசன், சேத்தன் எல்லாம் கொஞ்ச நேரம் வந்துட்டு போறாங்க.
அதே மாதிரி திரைகதையும் ரொம்ப யோசிக்கற மாதிரி வெச்சிருந்தாங்க. ஒரு சந்தேகம் எப்படி நம்ம ஹீரோக்கு மட்டும் அவ்ளோ இசியா க்ளு எல்லாம் கிடைக்குது. நமது தேசிய மொழி ஹிந்தி ல தேங்க்ஸ் கு எல்லாருமே ஷுக்ரியனு தான் சொல்லுவாங்க அதுக்காக எல்லாருமே வில்லன் ஆகிட முடியாதுன்னு கரெக்ட் ஆ யோசிச்சு ஒரு பபெர்ல ஏதோ புரியாத வார்த்தை எல்லாம் எழுதி அத வெச்சு வில்லன் ஆ கண்டு பிடிக்கிறார் நம்ம ஹீரோ. அதான் கண்டு பிடிச்சாசேனு பார்த்தா அப்பறம் ரெண்டு பேர போட்டு பொரட்டி எடுக்கறார். ஆனா சகியே சாங் கேட்கும் பொது நல்ல இருக்கு. பார்க்கும் பொது எந்த ஹீரோயின் காக அந்த சாங் னு கொஞ்சம் புரிய கஷ்டமா தான் இருக்கு.
மொத்ததில ஜீவா சார் இன்னும் கொஞ்சம் இந்த ப்ராப்ளம் எல்லாம் யோசிச்சிருந்தா படம் ரொம்ப நல்ல வந்திருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
you seem to be good critic..
send this to the id the director Or put it in a site where the comments are being seen..
To view you a tamil film you should go with atlest 4 to 6 ears ( not just 2 ears, which we have now ) so that they can roll on & on & on, meters of "malipoo" on your ears.. :)
Post a Comment