Friday, January 16, 2009
லவ் அண்ட் மொபைல் போன்
காதல் பண்றது தப்பில்ல. ஆனா காதலிகரவங்க பண்ற ரவுசு இருக்கே யப்பா. ரொம்ப ஓவர்ங்க. என்னோட நண்பருக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் நிச்சயம் பண்ண போறாங்க. இதுல காமெடி என்னன்னா ரெண்டு பெரும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 22 மணிநேரம் விடாம மொபைல் la பேசிக்கறாங்க. appadi என்ன தான் பேசுவாங்களோ அவங்களுக்கும் அந்த கடவுளுக்கும் தான் வெளிச்சம். சாப்பிடும் போது ஒருதருகொருதர் ஊட்டி விடற மாதிரி ஒரு சௌன்ட் வேற யம்மா தங்க முடியல. காலைல எழுந்து ஒரு கால் அப்பறம் சாபிட்ரதுகு முன்னாடி ஒரு கால் அப்பறம் சபிடதுகப்பரம் ஒரு கால். கொஞ்சம் விட்ட பல்லு தேச்சியா அது இதுனு வேற கேப்பாங்க போல. தாங்க முடில இவங்க தொந்தரவு. இதுல fonelaye பாட்டு கட்சேரி வேற. இவர் ஒரு பாட்டு பாடுவராம் அதுக்கு பதில அவங்க ஒரு பாட்டு பாடுவாங்களாம். ஏதோ புரிஞ்ச மொழில பாடின கூட பரவால்ல. எதுவுமே புரியது. இத விட இன்னொரு கொடுமை என்ன தெரியுமா அவங்க கொஞ்சிகறது. இது வரைக்கும் நாய்க்கு மட்டுமே அப்படி ஒரு பேர் வெச்சிருப்பாங்க போல. என்னடா இவ்ளோ பேசறானே இவனுக்கு நாகரிகமே கிடையாதா. ரெண்டு காதலர்கள் பேசும் போது இவன் எதுக்கு குறுக்கு நீங்க கேட்கற கேள்வி காதில விழுது. எனக்கு என்ன ஆசையா என்ன அந்த எடத்துல இருக்கணும்னு. நமக்கு சோதனைய நாம இருகர எடத்துக்கு வந்தே தான பேசறாங்க. இதுல இன்னொரு கொடுமை தெரியுமா இங்க ஒரு காபி ஷாப் போயிருந்தேங்க. ஒரு பையனும் பொன்னும் எதிர்க்க எதிர்க்க உட்கார்ந்து இருந்தாங்க. பொண்ணு பார்க்க கொஞ்சம் அழகாவே இருந்தாங்க. நான் ஒரு காபி ஆர்டர் பண்ணிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்த பொது ஒரே ஒரு டயலாக் காதுல விழுந்தது. அந்த பொண்ணு அந்த பையன் கிட்ட எங்க அப்பா அம்மா தங்கை எல்லாம் இந்த வீக்கென்ட் ஊர்க்கு போறாங்க. நீ ஒரு போன் பண்ணிட்டு வா நாம எங்க வீட்லயே டைம் spend பண்ணலாம். அதுக்கு அந்த பையன். என்ன விளையாடெல்லாம் உண்டா னு கேட்க அந்த பொண்ணு அதெல்லாம் அன்னிக்கு மூட பொறுத்து பார்த்துக்கலாம் நீ வரும் போது நான் சொன்ன படாத எல்லாம் எடுத்துண்டு வா. கவலைப்படாத என் நண்பன் கிட்ட ஏற்கனவே சொல்லி வெச்சிருக்கேன் அவன் எடுத்து வேசிருபான் நான் தான் யார்க்கும் தெரியாம மறைச்சு எடுத்துண்டு வரணும். எவ்ளோ முடியுமோ அவ்ளோ எடுத்துண்டு வரேன். எனக்கு அதுக்கு மேல அங்க உக்கார முடில சரின்னு எழுந்து இன்னொரு தப்லேகு போனேன். அங்க ஒருத்தர் நம்ம நண்பர் மாதிரியே போன்ல பேசிக்கிட்டு இருக்கார். நீ என்ன சோப்பு போன்ற என்ன சாப்ட என்ன பிளான் அது இதுனு. என்னோட mp3 player eduthu காதுல மாட்டிண்டு நான் பாட்டஉ கேட்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்பறம் எந்த ஒரு தகவலும் காதுல விழல. என்னோட காபி கொண்டு வந்து வெச்சவ சுகர் போடல நீங்க தான் அத்து பண்ணிக்கணும்னு சொன்னதையும் சேர்த்து. நானும் இப்படி தான் இருக்கும் இந்த காப்பு அறை கப் கசப்பா குடிச்சுட்டு பார்த்த பாகத்திலேயே சுகர் பக்கெட். காதுல இருந்து பாட்ட எடுத்தாலும் கஷ்டம் எடுகலனாலும் கஷ்டமா. என்னோட நண்பர் ஒருத்தர் பீத்திண்டார் அவர் ஊர்க்கு போயி ஒரு ஆறு மாசம் ஆரதாம். என்னடானு கெட்ட அவரோட லோவேரோட பேச முடியறதில்லயாம் ஊர்க்கு போனா. அதனால போறதே இல்லன்னு பெருமைய சொனார். எங்க தூக்கி வளர்த்த அப்பா அம்மா வா விட மொபைல் ல பெசரதங்க முக்கியம். ஒரு வர முடிவில போயிடு வந்து மறுபடியும் திங்கட்கிழமை பேசின அந்த பொண்ணு பேசாத என்ன? இதுல பொலம்பல் வேற ஐயோ என்கிட்ட பணம் இல்ல மச்சான் எல்லாத்தையும் செல்போன் பிள்ளக்கு கடிடேன் நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணுன்னு. நாமளும் சரின்னு ஒரு தடவ ஹெல்ப் பண்ணுவோம். கண்டிபா பணம் வந்ததும் கொடுத்திடறேன் மச்சான் னு சொல்லிடு போவாங்க. ஆனா அவங்களுக்கு எவ்ளோ பணம் வந்தாலும் நமக்கு மட்டும் வரத்து. இதாங்க லவ் ஓட சேர்ந்து மொபைல் படுத்தற பாடு. என்னவோ போங்க எல்லாரும் நல்ல படியா இருந்தா சரி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment