Friday, January 16, 2009

வாரணம் ஆயிரம்

தந்தைக்கும் மகனுக்குமான உறவை பற்றி கூறும் ஒரு படம். எல்லா நல்ல படத்திலயும் ஒரு கேட்டது கண்ணுல படும் இல்லையா. அந்த மாதிரி இந்த படத்துல எனக்கு தோணினது அந்த கிளைமாக்ஸ் காட்சி. தேவையே இல்ல அது. சூரியா எதுக்காக படம் ஆரம்பத்துல ஹெலிகாப்டர் ல போறார்னு சொல்டர்த்துக்காக அந்த காட்சின அத அவ்ளோ தூரம் இழுத்து அடிச்சிருக்க வேண்டாம். வெறுமன ஒரு டியாலோகுஎல சொல்லி இருக்கலாம். ஏன் கௌதம் மேனன் இப்படி யோசிசார்னு தெரில.

பாட்டு எல்லாமே கிளாஸ். வர வேண்டிய இடத்துல வந்திருக்கு. அனல் மேலே ஒரு துளி சாங் மட்டும் ஏதோ தனிய நிகர மாதிரி இருந்தது சிடில கேட்கும் போது. ஆனா படத்துல பார்க்கும் பொது அதுக்கும் கரெக்டா picturisation பண்ணி இருக்கறதா பார்க்கும் பொது நல்ல இருந்தது. அதே மாதிரி ஆட்டோகிராப் படத்துல வர மாதிரி சூரியவும் கெட்டு குட்டி சுவரா போறதையும் தவிர்த்திருக்கலாம். ஆனா அது இல்லன அப்பறம் படத்தோட ச்ற்றேங்க்த் போய்டும்ங்கறது உண்மை.

படத்தோட முக்கியமான சீன்ஸ் சூரியவும் சமீரவும் வர அமெரிக்கா காட்சிகள். சமீரா இவ்ளோ அழகா. ஏற்கவனே பல ஹிந்தி படத்துல பார்த்திருந்தாலும் இதுல ஏதோ ரொம்ப புதுசா இருகாங்க. அவ்ளோ அழகு. சூரியா சொல்ற டயலாக் ரொம்ப உண்மை. "அம்மா (சிம்ரன்) நீ தான் ரொம்ப அழகுன்னு நினைச்சுட்டு இருந்தேன் ஆனா உன்ன மிஞ்ச ஒருத்தி வந்துட்டா மா". ரொம்ப கரெக்ட். தமிழ் திரை உலக ஆடி படிச்சுட்டு இருந்த சிம்ரன் இப்போ ரொம்ப வயசாகி போய்ட்டதால சமீரா தான் அடுத்த அழகு. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை(இதான் இப்போ என்னோட ரிங்க்டோனே) என்ன ஒரு கலக்கலான சாங். ஒவொரு காதலனுக்கும் ரொம்ப ஏத்த சாங்.

அதே மாதிரி சமீரா ஓட சுத்தும் போது இப்போ எனக்கு இளையராஜா சாங் இல்ல ஒரு ராக் சாங் படனும்னு வர டயலாக் உம் சத்தியமா காதலா உணர்ந்து பார்த்தவங்களுக்கு கரெக்ட் னு புரியும். அதே மாதிரி அந்த காலத்து ஸ்டைல் ல வர முன்தினம் பார்த்தேனே இன்னொரு டாப் கிளாஸ் சாங். ஒரு லோக்கல் குத்து effect ஓட வர அஞ்சல சாங் தான் இப்போ லேட்டஸ்ட் ஹிட்னு சொல்றாங்க.

மொத்ததுல இருகர நேகடிவேச நீக்கி பார்த்த, படம் நல்லா வந்திருக்கு. குடும்பத்தோட பார்க்கலாம். ஒரே ஒரு கஷ்டமான விஷயம் லவ் அ தேடி அமெரிக்கா போறேன்னு உங்க புள்ள சொன்னா அதுக்கு கௌதம் மேனன் பொறுப்பு இல்ல.

No comments: