Monday, July 21, 2008

செஸ்ட் எக்ஸ்ரே

இதோ விசா ப்ரொசெஸ்ஸிங்ல அடுத்த ஸ்டேஜ். செஸ்ட் X-ரே எடுக்கணும். Wikipedia padi Australiaa is one of the countries where TB is very much under control. ஸோ அங்க டிரவெல் பண்ற ஒவ்வொருத்தரும் செஸ்ட் X-ரே ஒண்ணு ப்ரொட்யூஸ் பண்ணனும். இது நமக்காக இல்ல அவங்களோட Department of Immigration and Citizenship(DIAC) காக. அவங்களுக்குன்னு ஒரு சில ஆத்தரைஸ்ட் மெடிகல் இந்ஸ்டிட்யுக்ஷந்ஸ் இருக்காங்க. அங்க போய் ஒரு செஸ்ட் X-ரே எடுத்துக்கணும். அவங்களே அதோட ரிஸல்ட் DIAC க்கு அனுப்பிடுவாங்க. இதுல விஷயம் என்னனா, இந்த செஸ்ட் X-ரே ஓட ரிஸல்ட் நமக்கு வரவே வராது. Only for department. இந்த ரிஸல்ட் அ பொறுத்து தான் விசா நமக்கு கொடுக்கலாமா கூடததனு DIAC முடிவு பண்ணும். எங்க ஆஃபீஸ் ல கேட்டதுக்கு இந்த செஸ்ட் X-ரே எடுத்தத்தில் இருந்து 15 டு 18 டேஸ் குள்ள விசா ஸ்டம்ப் ஆகிடும்னு சொல்லி இருக்காங்க. அந்த ஃப்ரைடே தான் அமெரிக்கா ஓட சுதந்திர தினம். அன்னிக்கு தான் எங்களுக்கு அப்பாய்ன்ட்மென்ட் கொடுத்திருந்தாங்க அந்த மெடிகல் சென்டெர்ல. எனக்கு அன்னிக்கு மார்னிங் ஒரு மீட்டிங் வேற. ப்ராஜெக்ட் ல என்ன என்ன எல்லாம் இருக்குனு சொல்ட்ரதுக்காக அந்த மீட்டிங். ரொம்ப யூஸ்‌ஃபுல்லா இருந்தது. ஆனா மனசுக்குள்ள ஒரு டென்க்ஷன், எங்க அப்பாய்ன்ட்மென்ட மிஸ் பண்ணிட போறேன்னு. ஆனா பகவான் ஆசிர்வாதத்துல, கரெக்டா 12:20கு முடிஞ்சது. அப்பறம் உடனே லன்ச சாப்பிட்டு நான் மெடிகல் சென்டெர்க்கு கிளம்பிட்டேன். அங்க போன நிறைய பேர் ஆஸ்ட்ரேலிய விசா ஃபார்ம் ஓட இருந்தாங்க. எனக்கு ஒரே ஆச்சரியம். ஆஸ்ட்ரேலிய ல ஜனத்தொகை கம்மினு சொல்ட்ரான்களே இவ்ளோ பேர் டிரவெல் பண்றாங்களேனு. என் ஃப்ரென்ட் சொன்னார் எல்லாருமே மெல்பர்ந், ஸிட்நீ னு போக மாட்டாங்க, பாதி பேரு மிச்ச ஸ்டேட்ஸ்கும் போவான்கனு. அங்க போனதும் தான் தெரியும் பாஸ்‌போர்ட் கு Xerox காப்பி கண்டிப்பா வேணுமாம். சரினு பாஸ்‌போர்ட் அ எடுத்துண்டு அங்கேர்ந்து ஒரு xerox கடைய தேடின்டு போனேன். வைஃப் இன்னும் வரல. எப்படியும் அவ வந்ததும் தான் எக்ஸ்ரே எடுக்க போனும் அதனால கவலை இல்லாம இருந்தேன். கடைசில ஒரு 5 நிமிஷம் தேடினதுக்கு அப்பறம் ஒரு ஜெராக்ஸ் கதை கண்ணில பட்டது. அப்பாடானு, போய் ஜெராக்ஸ் காப்பி எடுத்துண்டு வந்தேன். நான் மெடிகல் சென்டெர் ரீச் பண்ண கொஞ்ச நேரத்தில என்னோட பாரியாளும் வந்துட்டா. ஸோ போய் ரெசெப்க்ஷன்ல பேற ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்தோம். நாங்க கொண்டு போயிருந்த ஃபார்ம் ல எங்க ஸைந் போடனும்னு சொல்லிட்டு, இருந்த ஒரு ஜெராக்ஸ் காபிய எடுத்து ஃபார்ம் ஓட ஸ்டெபிள் பண்ணி வெச்சிக்கிட்டாங்க. அப்பறம் ஒரு 5 நிமிஷம் கழிச்சு கூப்பிட்டு ஃபர்ஸ்ட் ஃப்ளோர் போய் எக்ஸ்ரே எடுத்துண்டு வாங்கனு சொல்லிட்டாங்க. நாங்களும் சரினு ஃபர்ஸ்ட் ஃப்ளோர் போனோம். அங்க போய்ட்டு வேயிட் பண்ணி எக்ஸ்ரே எடுத்துண்டு மேல வந்தோம். டாக்டர மீட் பண்ணினோம். அவங்க எங்களோட பாஸ்‌போர்ட் அ வெரிஃபை பண்ணிட்டு ஸைந் போட்டுட்டு அவ்ளோ தான் போய்ட்டு வாங்கனு அனுப்பிட்டாங்க. ஸோ, இப்போ அந்த ரிசல்ட்காக வேயிடிங். என்ன ஆகுமோ, தெரியல.

No comments: