Monday, July 21, 2008
சொல்ல வேண்டாம்னு நினைச்சாலும் சொல்ல வேண்டியதா போச்சே
நான் ரொம்ப சத்தம் போடாம இருக்கலாம் ஆஃபர் வந்ததும் எல்லாருக்கும் சொல்லாம்னு இருந்தேன். கோட்டை கதவு திரண்டு கேட் பாஸ்சும் கொடுத்து விட்டார் பகவான் ஆனா அதுல மானேஜர் ஸைந் பண்ணனுமே அப்போ தான என்னால உள்ள போக முடியும். அவங்க ஸைந் பண்னாடி போனா? இதுல பெரிய கொடுமை என்ன அப்படினா, இந்த ஆஃபர் லெடர் ஆஸ்ட்ரேலீயா ல இருந்து வரணுமாம். அதுல தான் எப்போ ஜாய்ந் பண்ணனும்னு போட்டிருப்பாங்களாம். அத வெச்சு தான் நம்ம பயண தேதி முடிவு ஆகுமாம். எனக்கு ஒரு பயம் எங்க 10 நாள்ல ஜாய்ந் பண்ணனும்னு சொல்லிட்டாங்க நா? சரி அதனால மௌனமா இருப்போம் வந்ததும் சொல்லலாம்னு விட்டாச்சு. இதுக்கு நடுல என்னோட மானேஜர் மெஸேஜ் பண்ணினார். உனக்கு விசா processing ஆரம்பிச்சதும் எனக்கு சொல்லு னு. நானும் சரினு சொல்லிட்டேன். எதுவா இருந்தாலும் ஆஃபர் கு அப்பறம் தான்னு சொன்னதால் பொறுமையா பார்த்துக்கிலாம்னு ஏத பத்தியுமெ கவல படல. ஆனா என்னோட நண்பர் இன்னொரு விஷயம் சொன்னார், ஸெலெக்ட் ஆனதும் ஐதெராபாத் ல இருந்து மெய்ல் வரும் விசா ப்ரோசேஸ்ஸிங்க்கு னு. நான் கேட்டேன் ஆஃபர் வராமலானு. அவர் சொன்னார் அதுக்குள்ள அவங்க ஆஃபர் எல்லாம் ரெடீ பண்ணிடுவான்க னு. ட்யூஸ்டே ஜால்லியா ஆஃபீஸ் கு வந்துட்டு போனேன். வெட்நெஸ்டே தோன்னித்து எவ்ளோ நாள் ஆகும் ஆஃபர் வரதுக்குணு கேட்கவே இல்லையே னு. சரி அன்னிக்கு மெய்ல் அனுப்பலாம் னு பார்த்த, ஐதெராபாத் ஆபீசில இருந்து விசா ப்ரோசேஸ்ஸிங்க்கு மெய்ல் வந்திருந்தது. என்னடா இது ஆஃபர் வராமலே இத ஆரம்பிக்கறாங்களேனு யோசிச்சேன். யார கேட்கரது னு யோசிச்சு என்னோட ப்ராஜெக்ட் மானேஜரையே புடிச்சேன். என்ன பண்ணலாம்னு. அவரும், ஆஃபர் இன்னும் நாள் ஆகுமாம் விசா ப்ரோஸெஸ் தான் லேட் ஆகும் அதனால இத அனுப்பிடுனு சொன்னார். எனக்கு ஒரு மூணு ஃபைல் அனுப்ப சொல்லி கேட்டிருந்தாங்க. ஒரு எக்ஸ்ஸெல் ஃபைல என்னோட டீடேல்ஸ், லைக் டேட் ஆஃப் பர்த், எக்ஸ்பீரியெந்ஸ் அண்ட் இஃப் ஐ கெட் தி விசா ஹூ வில் பி அக்கோம்பணியங் மீ னு. எல்லா டீடேல்ஸ் உம் போட்டேன். கூடவே என்னோட ரெஸ்யூமெ ஒண்ணு கேட்டாங்க. அப்பறம் ஜாப் ப்ரொஃபைல், அங்க போய் என்ன மாதிரி வேலை பண்ண போறேன்னு ஃபில் அப் பண்ண சொன்னாங்க. அங்க போய் டீ ஆத்தக் கூடா தில்ல அதுக்காக. சே இவ்ளோ சிம்பிள் மேட்டரா இருக்கேன்னு எல்லாத்தையும் ஒரு மணி நேரத்தில முடிச்சு அனுப்பி வெச்சேன். சரி இதுக்கு மேல பகவான் பார்த்துபார்ன்னு விட்டுட்டேன். தர்ஸ்டே வந்துட்டு போச்சு பெரிசா ஒண்ணும் நடக்கல. சரி ஃப்ரைடே நல்ல நாலா இருக்கே இன்னிகாவது ஆஃபர் வரணும்னு நினைச்சுட்டு ஆஃபீஸ் போனேன். போற வழி முழுக்க பகவான ப்ரே பண்ணிண்டே போனேன். ஆனா ஆஃபர் வரலை வேற ஒண்ணு தான் வந்து இருந்தது. என்னோட கம்பனில ஆஸ்ட்ரேலிய ல என்னோட விசா அப்ளிகேக்ஷன் ஃபைல் பண்ண ஒரு ஏஜெந்ஸீ ஏற்பாடு பண்ணி இருக்காங்க அவங்க கிட்ட இருந்து ஒரு மெய்ல். மெய்ல் னா சும்மாவா கூடவே ஒரு 6 documents. ஏல்லாத்தெலயும் விவரத்தை ஃபில் உப் பண்ணி, நான் ஸைந் பண்ணி அத ஸ்கேன் பண்ணி அனுப்ணுமாம். ஃபக்ஸ் எல்லாம் பண்ணா பேபர்ஸ் மிஸ் ஆகும்னு ஸ்கேன் தான் பண்ணி அனுப்பனுமாம். சரினு உக்காந்து ஒவ்வொரு டாக்குமெண்டா ஃபில் அப் பண்ண ஆரம்பிச்சேன். நான் மட்டும் ஸைந் பண்ணா போறாதாம் வைஃபும் ஸைந் பண்ணனுமாம் "since she is also travelling with me". அட பாவிகளானு ஃபில் அப் பண்ணி பிரிண்ட் எடுத்துட்டு வீட்டுக்கு போயிட்டேன். இந்த மெய்ல் தான் நான் சொன்ன அந்த மிகப் பெரிய விஷயம். Because as per the agency these are the documents that will go to the australian embassy. ஸோ ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வெச்சாச்சு. இது போதுமே உலகத்துக்கு நான் சொல்ல. அடுத்த வாரம் என்ன ஆச்சு தெரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment