Friday, July 18, 2008

கோட்டைக் கதவு

ஐடீ பில்டில இருக்கற எல்லாருக்குமே ஒரு கனவு ஃபாரிந் போகணும்னு. எனக்கும் இருந்தது. ஒரு தடவை சிங்கப்பூர் மலேசியானு ஒரு 8 மாசம் சுத்திட்டு வந்தேன். ஆனா லாங் டேர்ம் தங்கர ப்ளான் இல்லாததல, அவ்ளோ தான் போல இருக்குனு விட்டுட்டேன். ஆனா என்னோட நண்பர்கள் எல்லாம் வீடு கார்னு வாங்கும் போது எனக்கு கொஞ்சம் யோசனையா இருக்கும் பேசாம சிங்கப்பூர்லாயோ மலேசியால்லயோ செட்டில் ஆகி இருந்த நாமும் இப்படி தான் இருப்போம்னு. ஆனா எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டேன், என்ன தான் இன்னொரு ஊர்க்கு போய் சம்பாதித்தலும் இங்க அப்பா அம்மா பக்கத்தில இருக்கற சுகம் கிடைக்குமான்னு. ஆனாலும் ஆசை இருந்துண்டே இருந்தது. அப்பா அம்மாக்கு ரொம்ப வயசு ஆகுரதுக்கு முன்னாடி ஒரு 5 வருஷம் போய் சம்பாததிச்சுட்டு வந்து அவங்கள ராஜா ராணி மாதிரி வெச்சுக்ணும்னு ஒரு ஆசை இருந்துண்டே இருந்தது.
நான் ஒர்க் பண்ணது எல்லாமே MNC யா இருந்தாலும் என்னமோ எனக்கு சான்சே வாய்க்கல வெளி நாடு போறதுக்கு. சென்னை விட்டா பெங்களூர் இந்த ரெண்டு எடததில தான் இருந்தேன். ஆனா பகவான் கோட்டை கதவ திறந்து வெச்சுண்டு எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார் னு தெரிஞ்ச போது வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கணும் போல ஒரு ஃபீலிங். இது நடந்தது போன மே மாசம் ஒரு வியாழ கிழமை அன்னிக்கு. இங்க எங்க ஆபிசில் யார எந்த ப்ரொஜெக்ட்ல போட்டா ப்ராஜெக்ட் கு நல்லா இருக்கும்னு யோசிச்சு அவங்களே அலொகேட் பண்றதுக்கு ஒரு மானேஜர் இருப்பாங்க. ஐடீ பாஷைல சொல்லணும்னா ஓவொறு ப்ளாட்பார்ம்கூம் ஒரு மானேஜர் இருப்பாங்க இந்த மாதிரி. இவங்க என்ன பண்ணுவாங்க நம்மோட ப்ரொஃபைல் கிளையண்ட் உக்கு அனுப்பி அவங்க ப்ராஜெக்ட் டுக்கு நாம ஒத்து வருவோமானு பார்த்து interview schedule பண்ணனும். நான் சொன்ன அந்த வியாழக்கிழமை மதியம் என்னோட மானேஜர் என்னை கூப்பிட்டு இந்த மாதிரி ஒரு ப்ராஜெக்ட் வந்திருக்கு உனக்கு நாளைக்கு இந்டர்வ்யூ, எப்போ னு அந்த ப்ராஜெக்ட் மானேஜர் கால் பண்ணுவார்ணு சொன்னாங்க. நானும் சரினு சொல்லிட்டேன். பரிட்சைக்கு கூட படிக்காத அளவு அந்த ப்ரோஜெக்கிட்கு இந்டர்வ்யூ க்கு படிச்சேன். ஏன் என்றால் மொதல் ப்ராஜெக்ட் தான் சொடப்பிடுச்செ இதுவாச்சும் நல்ல பாடிய இருக்கணும் னு.
மறுநாள் ஆபிஸ்கு டிரவெல் பண்னும்போதே அந்த ப்ராஜெக்ட் மானேஜர் கால் பண்ணி பன்னிரெண்டு மணிக்கு முன்னாடி இந்டர்வ்யூ வெச்சுக்லாமானு கேட்டார் நானும் சரினு சொல்லிட்டேன். எங்க ஆஃபீஸ் ஒரு பெரிய ஐடீ பார்க்கில இருக்கு. என்னோட ஸீட் இருக்கற building ஒரு கோடி அவர் இருக்கற building இன்னொரு கோடி. ஸோ சொன்ன டைமுக்கு 10 நிமிஷத்துக்கு முன்னாடியே அங்க போய் அவர் ஸீட் ஆஜர் ஆகிட்டேன். என்ணலாமோ கேப்பாங்கணு என்ன நல்லாவே ப்ரிபேர் பண்ணிட்டு போயிருந்தேன். ஆனா பகவான் ஆஸிர்வாதத்துல இந்டர்வ்யூ என்ன பெரிசா எதுவுமே கேட்கலை நான் ஏதுல எல்லாம் ஒர்க் பண்ணி இருக்கேன் என்ன எல்லாம் ஒர்க் பண்ணி இருக்கேன் னு கேட்டாங்க. ப்ராஜெக்ட் பத்தியும் சொன்னாங்க. ப்ராஜெக்ட் ஆஸ்ட்ரேலீயா லானு சொன்னாங்க. எல்லாத்தையும் விட ப்ரோஜெக்ட்காக நான் ஆஸ்ட்ரேலீயா போகணும்னு வேற சோனாங்க.
இதோ பகவான் எனக்காக திறந்து வெச்சிறுக்கிற கோட்டைக் கதவு கிட்ட வரைக்கும் வந்துட்டேன் உள்ள போவெநானு தெரிளாயே னு நினைச்சேன். ஏன் என்றால் நான் ஸெலெக்டெட் இல்லயானு சொல்லாம திங்கட்கிழமை சொல்ரோம்னு சொல்லி அனுப்பிட்டாங்க. வீக்கெண்ட் ரெண்டு நாள் இதே நினைப்புல என்ன பண்ண எது பண்ணனு தெரியாம உக்கந்தூட்டு இருந்தேன். ஒரு வழிய திங்கட்கிழமை வந்தது.

No comments: