Thursday, July 24, 2008

குழப்பங்களும் டிஸ்கக்ஷன்ஸும்

பல தமிழ் சினிமால பார்த்திருப்பீங்க ஒரு நகைச்சுவை நடிகரோ இல்ல ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டோ இந்த டயலாக் சொல்லி கேட்டிருப்பிங்க, "குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்காதே" னு. இந்த டயலாக் அ நார்மலா நாமும் கிண்டலா சொல்றதுன்டு. இந்த மாதிரி சமயத்துல குழப்பம் எப்பவுமே தப்பா புரிந்சுக்கறதால வரது. எனக்கு என்ன குழப்பம்னு பார்க்கறீங்களா, எல்லாம் இந்த விசா வரலைங்கரதால தான் எல்லா ப்ராப்ளமும். பின்ன என்னங்க ஏதோ அப்ளை பன்னோம் நிம்மதியா இருந்தோம் னு விடராங்களா இல்லையே வீட்ட காலி பண்ணனும், எல்லாத்தையும் எடுத்துண்டு போய் சென்னைல வைக்கணும், கார கொண்டு போய் சென்னைல விடனும். நாங்க இன்னும் ஹைவேஸ்ல ஓற்ற அளவு கத்துகல தைரியமும் இல்லை. ஸோ இருக்கற ட்ரைவர் அ வெச்சே தான் வண்டிய எடுத்துண்டு போகணும், நான் வெளிநாடு போறதால அவர் வேற வேலைக்கு முயற்சி பண்ண ஆரம்பிச்சுடார். அவர் இன்னொரு வேலைக்கு போறதுக்கு முன்னாடி வண்டிய சென்னை எடுத்துண்டு போயாகனும். இல்லனா இன்னொரு ட்ரைவர் அ பிடிக்கணும் அவர் ஒழுங்கா வண்டிய ஒடிட்டு வரணும். எத்தன குழப்பங்கள் பாருங்க. இத விட பெரிய கொடுமை வீட்ட சுத்தம் பண்றது. யப்பா எவ்ளோ தேவை இல்லாத பொருள் சேர்த்து வெச்சிருக்கோம்னு அப்போ தான் தெரியும். ஃபோன்ல ஆரம்பிச்சு எல்லாத்துக்கும் அட்வான்ஸ் வாங்கிக்கராங்க நம்ம ஊரில ஆனா அதெல்லாம் திரும்பி வாங்கனும்னா அந்த டாக்குமெண்ட கொண்டு வா இத கொண்டு வா னு 1008 கேக்கறாங்க இதுக்காகவே ஒவ்வொரு பில்லையும் சேர்த்து வெச்சுக்க வேண்டியிருக்கு. எல்லாத்தையும் பார்த்து எது தேவை எது தேவை இல்லைனு பார்த்து தூக்கி போட வேண்டியத எல்லாம் தூக்கி போட்டு சுத்தம் பண்ணினோம். இன்னும் சில டாக்குமெண்ட்ஸ் எங்களோட முக்கியமான தகவல் ஓட இருந்தது அதை எல்லாம் தனியா பிரிச்சு எரிக்க போடணும். எத்தனை பாருங்க. இப்போதைக்கு நான் மட்டும் தான் மெல்பர்ந் போரேன்னாலும், வைஃப்க்கும் எந்த பிரச்னை வர கூடாதுன்னு ஒவ்வொரு விஷயத்தையும் சென்னை முகவரிக்கு மாத்திட்டு போகனும். என்னமோ இதோ முடிந்சிரும்னு பார்த்தா இழுத்துட்டே போகுது. ஊர்க்கு வேனும்னு ஒரு பெட்டிய வாங்கினோம். அதுல என்னோட துணி எல்லாம் போட்டு சென்னைல கொண்டு போய் வெச்சிடுலாம்னு ப்ளான் பண்ணி எடுத்துண்டு போனேன். எங்க நேரம் கணம் தாங்காம கொஞ்சம் கிழிஞ்சிருச்சு. அட கொண்டு போய் கடைல காமிச்சா மாத்தி தர மட்டோம்னு சொல்லிட்டாங்க. அட பாவிகளானு வந்திட்டேன். என்ன பண்ண போரேன்னு தெரியலை. இப்போ அதுக்கு பதிலா இன்னொரு பெட்டி வாங்கணும் இல்லைனா நிறைய பைய்ல போட்டு எடுத்துட்டு போகனும். பார்க்கலாம் என்ன பண்ண முடியுதுன்னு. பகவான் தான் கூடவே இருந்து எந்த ப்ராப்ளமும் இல்லாம பத்திரமா பாத்துக்கணும். நாளைக்கு ஒரு வேலை பகவான் ஆசீர்வாதம் இருந்து விசா வந்திருச்சுனா சொல்றேன். இப்போதைக்கு வீட்டுக்கு கிளம்பறேன்

1 comment:

Vidhya C Sekhar said...

Unnoda lettera padichuttu appadiye urugi poitten. Bhaghawan ellathaiyum nallapadia mudichiduvar. Kavlai padhathe

Amma