skip to main |
skip to sidebar
புது கம்பனி புது ப்ராஜெக்ட்
ஏப்ரில் மாசத்தூககப்பறம் இப்போ தான் இந்த பக்கம் வறேன். ஏன் அவ்ளோ பிஸியா, சே சே இல்லங்க நீ வேற. எனக்கு ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தாங்க. சரி இந்த ப்ரொஜெக்ட்ல நல்லா பண்ணி நல்லா பேர் வாங்கணும்னு வெறியொட உக்காந்திருந்தேன். உக்காந்திருந்தேன் உக்காந்திருந்தேன் உக்காந்துண்டே இருந்தேன். வேற என்ன சொல்ல. நவம்பர் ஆரம்பிச்ச ப்ரொஜெக்ட்ல வேலை ஃபெப்ருவரீ வரைக்கும் கொடுக்கவே இல்ல. அப்பறம் ஃபுல் ஃபார்ம்ல ரெண்டு மாசம் வேலை பண்ணினோம் அப்பறம் திரும்ப வேலை கொடுக்கவே இல்ல. நாங்களும் எவ்ளோ கேட்டாலும் தரவே இல்ல. என்னடா முதல் ப்ரொஜெக்ட் இப்படி இருக்கே, முதல் கோணல் முற்றும் கோணல் னு ஆகிடுமோணு ஒரு எண்ணம். அஸ்ட்ராலஜீ ல சொல்லுவான்களே , நல்ல நாள் நல்ல நேரம் பார்காம சேர்ந்து விட்டேனோணு வேற ஒரு சந்தேகம்.
இது எல்லாம் கூட பரவால்ல. ஒரு வழிய ப்ராஜெக்ட் முடிஞ்சு போச்சு னு அறிவிச்சாங்க. புது ப்ராஜெக்ட் தாரோம்னு சொன்னாங்க. ஏன் கூட முதல் ப்ரொஜெக்ட்ல இருந்த ரெண்டு பேர்க்கு புது ப்ராஜெக்ட் கொடுத்துட்டாங்க. எனக்கு லேட் ஆகவும் என்ன ஆகுமொனு ஒரு கவலை. ஆனா ஆண்டவன் ஒரு கதவை மூடினா எனக்கு ஒரு கோட்டை யோட கதவையே திறந்து வெச்சிருகார் னு அப்போ தெரியல. சேம போர் அடிச்சுண்டு பாட்டு கேதுந்து உகந்டிருந்தேன். மானேஜர் கிட்ட கேட்டா உனக்கு பொருத்தமான ப்ராஜெக்ட் தேடி கிட்டு இருக்கோம் அது வரைக்கும் ட்ரைன் யுவர்ஸெல்ஃப் மோர் னு சொல்ட்ரார். எதுலனு அப்போ எனக்கு தெரியல!!!!
No comments:
Post a Comment