செஸ்ட் எக்ஸ்ரே எடுத்து அதோட மெடிகல் ரிபோர்ட்ஸ் ஆயும் சேர்த்து, அந்த மெடிகல் செண்டரே ஸிட்நீ கு அனுப்பிடும்னு சொன்னாங்க அங்க ரெசெப்க்ஷன்ல இருந்தவங்க. கொரியர் பைசா மட்டும்
நாம கொடுக்கணும்னு. சரின்னு எல்லாத்தையும் முடிச்சுண்டு நாங்க கிளம்பினோம். அதுக்கப்பறம் தான் ரொம்ப்ப்ப்ப நாள் காத்திருக்க வேண்டியதா போச்சு. நான் எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ நாள்
ஆகும்னு ஆபீசிலயும் சீக்கிரம் வந்திரும்னு ஜுலை இருபத்தி நாலு டிக்கெட் புக் பண்ண சொன்னாங்க. எனக்கு ஒரு தயக்கம் எங்க அத விட லேட் ஆச்சுன்னா என்ன பண்ண அப்படினு? ஆனா
மானேஜர் ரெண்டு மூணு தடவ சொன்னதும் நானும் எங்க ஆபீசில சொல்லி டிக்கெட் புக் பண்ண சொல்லிட்டேன். அவங்களும் உடனே இருபத்தி நாலாம் தேதிக்கு புக் பண்ணிட்டாங்க. நான் மெல்பர்ந்
போனதும் தாங்கரத்துக்கு, பதினாலு நாள் வரைக்கும் ஒரு ஹோட்டேல ரூம் புக் பண்ணி தருவொம்னு சொல்லி இருந்தாங்கான்ணு அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். நாலாம் தேதி செஸ்ட் எக்ஸ்ரே
எடுத்தோம் இல்லயா அதுல இருந்து மூணு நாள்ல அந்த ரிபோர்ட் எல்லாம் ஸிட்நீ போய்டும்னு சொன்னாங்க. ஆனா அஞ்சு நாள் ஆச்சு. கரெக்டா சொல்லணும்னா ஜூலை பதினோராம் தேதி தான்
போய் சேர்ந்திச்சு. சரி கோரியர் தான் இவ்ளோ லேட், அங்க டிப்பார்ட்மென்ட் ல வேலை வேகமா பண்ணுவாங்கணு பார்த்தா அவங்களும் லேட் பண்ணிட்டாங்க. எங்களோட செஸ்ட் எக்ஸ்ரே ரிஸல்ட
பார்த்து மொதல்ல இது போதுமா போறாதானு முடிவு பண்ணுவாங்களாம். அப்பறம் அத வேற ஒருத்தர் பார்த்துட்டு சரி இவங்களுக்கு விசா கொடுக்கலாம்னு விசா அனுப்புவங்கலம். நார்மலா செஸ்ட் எக்ஸ்ரே பார்த்துட்டு முடிவு செஞ்ச நாளில் இருந்து மூணு லேர்ன்து அஞ்சு நாள்ல விசா வந்திரும்னு எனக்கு சொன்னாங்க. பதினோராம் தேதி போன செஸ்ட் எக்ஸ்ரே ரிஸல்ட்ட
பார்த்துட்டு முடிவு பண்ணவே அவங்களுக்கு பதினெட்டு தேதி ஆகிடுத்து. சரி அதான் முடிவு பண்ணிட்டாங்களே விசாவ ரிலீஸ் பண்ணிடு வாங்கனு பார்த்தா இருபத்தி நாலாம் தேதி வரைக்கும் விசா
வரவே இல்ல. நான் இங்க வீடு காலி பண்றதில ஆரம்பிச்சு என்னோட கார எடுத்துண்டு போய் சென்னைல விடர வரைக்கும் ப்ளான் பண்ணி வெச்சிருன்தேன் இருபத்தி நாலாம் தேதி பறக்க
போறேன்னு நினைச்சுண்டு. ஆனா விசா வரலனதும் டிக்கெட்ட முப்பதாம் தேதிக்கு மாத்த சொல்லிட்டார் மானேஜர். திரும்ப ஆபீசில சொல்லி டிக்கெட்டையும் ரூமையும் முப்பதாம் தேதிக்கு
மாத்திரத்துக்கு மெய்ல் அனுப்பிட்டேன். ஆபீசில இந்த மாதிரி வெளி நாட்டுக்கு போறவங்களுக்கு அந்த நாடு பைசா கொஞ்சம் கைல கொடுத்து அனுப்புவாங்க. அப்பறம் அத மாசா மாசம் சம்பளத்தில்
இருந்து பிடிச்சுப்பபாங்க. இது எதுக்குன்னா நாம அந்த நாட்டுல போய் எறங்கினாததும் சாப்பிடறதுக்கு கூட காசில்லாம தின்டாட கூடாதுன்னு. அதுக்கு தனியா ஒரு மெய்ல் அனுப்பனும்னு என்கிட்ட
சொல்லி இருந்தாங்க. நானும் இருபத்தி நாலாம் தேதியே பறக்க போறேன்னு நினைப்புல பதிநேழு தேதி வாக்குல ஒரு மெய்ல் அனுப்பிட்டேன். அவங்களும் உங்களுக்கு இருபத்தி ஒண்ணாம் தேதி ஆஸ்திரேலிய பைசா
கொடுத்துடறோம்னு பதில் அனுப்பிட்டாங்க. சரி எல்லா வேலையும் நிம்மதியா முடிந்சுடும்னு காத்திருந்தேன். ஆனா பதினெட்டாம் தேதி தான் செஸ்ட் எக்ஸ்ரே ரிஸல்ட் முடிவு பண்ணதால்
சென்னைக்கு ஒரு எட்டு போய்ட்டு வரலாம்னு அந்த சனிக்கிழமை கிளம்பி போய்ட்டு செவ்வாய்க்கிழமை திரும்ப வந்தேன். நானும் டேய்லி என்னோட பாஸ்போர்ட தூக்கிண்டு ஆபீஸ் போறேன் என்ன
பிரயோஜனம் விசா டாக்குமென்ட்ஸ் இன்னும் வரலயே. நாளைக்கு வந்தா தான் முப்பதாம் தேதி கிளம்ப முடியும். ஆனா நாளைக்காவது வருமா பொறுத்திருந்து தான் பார்க்கணும். பொறுத்தார் பூமி
ஆள்வார் னு சொல்வாங்க. நான் காத்திருந்த டைமுக்கு என்ன சொல்வாங்கனு தெரியல. என்ன ஆச்சுனு நாளைக்கு சொல்றேன். அது வரை பொருத்திருங்க.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment