Monday, February 2, 2009

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

பெந்களூர் ரோட்ல வண்டி ஓட்டுகிற எல்லாருக்குமே பொதுவாக தோண கூடிய ஒரு விஷயம் என்னப்பா இந்த ஊரு மக்கள் சிக்னல் எல்லாம் மதிக்க மாட்டாங்களானு. அந்த அளவுக்கு மோசமா ஒட்டுகிறவங்க இங்க இருக்காங்க. ரூல்ஸ் எல்லாம் மதிச்சு ஒட்டுகிறவங்களும் இருக்காங்க. ஆனா அவங்களையும் தப்பு பண்ண வெச்சிடு வாங்க இங்க ஓட்டுகிற சில பேர். சிக்னல் ரெட்ல இருக்குனு தெரிஞ்சும் பின்னாடி வந்து காடு கிழிய தலை வலிக்கற மாதிரி ஹார்ந் அடிப்பாங்க. சில சமயம் போய் ஒரு கத்து கத்திட்டு வரலமானு கூட தோணும். அதுவும் ஒரு போலீஸ் கண்ணில பாட வில்லை என்றால் போதும் இவர்கள் கொட்டம் அடிப்பார்கள். எதிரில ஒரு ரெண்டு சக்கர வண்டில ஒரு கர்பினி பெண் வந்தாலும் கவலை இல்ல இவங்க மொதலா போயிடணும். அப்படி எங்க தான் போக போறாங்களோ தெரியல. அப்பறம் ரோட்ல நடுல ஒட்டிட்டு இருப்பாங்க. இண்டிகேடர் எதுவும் போடாம கையயும் காமிக்கமா அப்படியே எடது பக்கமோ வலது பக்கமோ திரும்ப வேண்டியது. பின்னாடி வரவன் எக்கேடு கெட்டா என்ன. நாம போற எடத்துக்கு நாம போயிடணும். மேல் உலகத்துக் போக போறாங்களோ என்னவோ. இதே தான் மிச்ச இடத்திலையும்ணா இந்திய நாடு எங்க போய்ட்டு இருக்குனு தெரில. உலகத்துல எல்லா நாடுகள்லையும் அடுத்தவனை மதிச்சு டிராஃபிக் விதிகளையும் மீராம ஓட்றாங்க. இதுக்காக வே இங்க ஓட்டரவங்களை எல்லாம் அங்க ஒரு மாசம் ஓட்டிட்டு வந்தா தான் லைசென்ஸ் னு சொல்லிடணும்.

No comments: